கோடை காலத்தில் உருமாறி கொரோனா அலை வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்த உலக நாடுகள், அதன் மூன்று அலைகளில் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலி கொடுத்துலிட்டது.
பொதுமுடக்கம், தடுப்பூசி என தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, கொரோனா தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாக உலக நாடுகள் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ள நிலையில், உலக மக்களின் தூக்கத்தை கலைக்கும் விதமான அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
.கோடை காலத்தில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் அல்லது வேறொரு உருமாறிய கொரோனா அலை உருவாகலாம் என்று இஸ்ரேலின் பென் குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
ஓமைக்ரான் மற்றும் டெல்டா வைரசின் உருமாற்றம் குறித்த தங்களது பல்வேறு படிநிலை ஆராய்ச்சியின் அடிப்படையில் இஸ்ரேல் நிபுணர்கள தெரிவித்துள்ள இந்த தகவல் உலக மக்கள் மத்தியில் மீண்டும் கொரோனா அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நான்காவது அலை வருவதற்கு வாய்ப்பி்ல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்ஆர்) அண்மையில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கோடையில் உருமாறிய கொரோனா வர வாய்ப்புள்ளது என்பது ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது கோடை காலம் உச்சத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.