இன்றும் 03.20 நிமிடங்கள் மின்வெட்டு
நாடு முழுவதும் இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி நாடு முழுவதும் 3 மணித்தியாலங்களும், 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
A முதல் L வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும்,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.
மேலும் கொழும்பு முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியினுள் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.