நிவாரணப் பொருட்களை இலங்கை மக்களுக்கு வழங்க மத்திய அரசு அனுமதி

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

தமிழக அரசின் நிவாரணப் பொருட்களை இலங்கை மக்களுக்கு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் உணவு மற்றும் மருந்து பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், “இலங்கை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரக்கூடிய நடவடிக்கைகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு இலங்கை தமிழர்களுக்கு வழங்க முன் வந்த உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சரின் மூலமாக இந்த உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள ஜெய்சங்கர், தமிழ்நாடு தலைமை செயலாளர் வெளியுறவுத்துறையோடு இணைந்து செயல்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.