4 வயது மகனுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த பெண்
குடும்ப தகராறு காரணமாக தனது 4 வயது மகனுடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பெண் ஒருவர், உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு லிந்துல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், தலவாக்கலை காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் இணைந்து நான்கு வயது சிறுவனை தேடுவதற்கான நடவடிக்கைகளை வௌ்ளிக்கிழமையும் (17) முன்னெடுத்திருந்தனர். அந்த சிறுவன் சடலமாக, மீட்கப்பட்டுள்ளார்.