பங்களாதேஷ் சிறையில் தீ – கைதிகள் தப்பி ஓட்டம்


பங்களாதேஷில் மாணவர்கள் ஆரம்பித்துள்ள எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள வன்முறையில் 39 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பொலிஸார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும் போராட்டக்காரர்களால் பொது இடங்கள், சிறைச்சாலை, கட்டடங்கள் என பல பகுதிகளிலும் தீ வைக்கப்பட்டது.

பங்களாதேஷின் மத்திய பகுதியில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனைப் பயன்படுத்தி சிறையிலிருந்து 100 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *