அனைத்து பாடசாலைகளும் நாளை – கல்வியமைச்சின் விசேட அறிவிப்பு


நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் (27) வழமைப்போன்று இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு லோட்டஸ் வீதியில் ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று முன்னெடுத்த போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளையும் (27) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே நாளைய தினம் வழமைப்போன்று பாடசாலைகள் இடம்பெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையுடன், ஆசிரியர்-அதிபர்கள் ஒன்றிணைந்த குழு இன்று (26) கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *