கைப்பேசியால் வாக்குவாதம் – நண்பன் குத்திக் கொலை

வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் – மின்சார சபை கோரிக்கை
நாடளாவிய ரீதியில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, அனல் மின்சாரத்தை பெறுவதற்கு செலவிடப்படும் [...]

மதுபோதையில் மோதல் – நால்வர் வெட்டி கொலை, மூவர் படுகாயம்
மதுபோதையில் இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் [...]

துபாயில் கோட்டாபய விலங்குகளுடன் உல்லாசம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துபாயில் உள்ள தனியார் விலங்கினச்சாலையில் விலங்குகளுடன் [...]