ரஷ்யாவில் திடீர் தாக்குதல் – 40 பேர் பலி, 100 பேர் காயம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றினால் 40 பேர் வரை உயரிழந்துள்ளதுடன் 100 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொஸ்கோவில் ‘பிக்னிக்’ என்ற இசைக்குழுவின் கச்சேரியில் கலந்துகொண்ட மக்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இசை அரங்கு ஒன்றில் நுழைந்த 5 மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் மர்மநபர்கள் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்தினை தீயிட்டு கொழுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related Post

7 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலையினால் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை [...]

யாழில் நடந்த பயங்கர சம்பவம் – வீட்டின் மீது குண்டுத் தாக்குதல்
யாழ். புத்தூர் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள [...]

கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம்
2022 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி போராட்டத்தின் போது கோட்டை [...]