தகாத உறவினால் ஏற்பட்ட மோதல் – 3 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம்

தகாத உறவு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏற்பட்ட வாள்வெட்டு காரணமாக மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (19) இரவு கிளிநொச்சி இராமநாதபுரம், கல்மடு பகுதியில் இடம்பெற்றுள்ளது . படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,
காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.28 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களும், 28, 30 மற்றும் 50 வயதுடைய மூன்று பெண்களுமே இவ்வாறு காயமடைந்துள்ள நிலையில்,
இவர்கள் பளை மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மற்றும் வட்டக்கச்சி பிரதேசத்தில் வசிக்கும் மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகாத உறவினால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன்
இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

யாழில் அயல் வீட்டாருடன் வாய்த்தர்க்கம் – அடித்து நொருக்கப்பட்ட வீடு
யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று பிற்பகல் வன்முறை கும்பல் தாக்குதல் [...]

எதிர்வரும் 11ம் திகதி நாடு திரும்புகின்றார் கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் [...]

நாளை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்
நாளை மாலை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. [...]