தமிழகத்தில் இதுவரை லியோ படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் லியோ. இப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதுவரை உலக அளவில் லியோ படம் ரூ. 577 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக இறுதி வசூலில் மாபெரும் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும் லியோ படம் தமிழகத்தில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, லியோ இதுவரை தமிழக பாக்ஸ் ஆபிஸில் மட்டுமே ரூ. 207 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ரூ. 100 கோடிக்கும் மேல் ஷேர் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இனி வரும் நாட்களில் தமிழகத்தில் வேறு என்னென்ன வசூல் சாதனைகளை லியோ படம் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.