இலங்கையர்கள் எகிப்துக்கு நுழைய அனுமதி

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் காரணமாக, மூன்று இலங்கை குடும்பங்கள் உள்ளிட்ட பதினேழு பேரை ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களில், இருவர் பலஸ்தீன பிரஜைகள் என்பதால் அவர்களில் பதினைந்து பேர் எல்லையை கடப்பதற்கு அனுமதி பெறுவார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

எகிப்து தூதர் அலுவலகம் மற்றும் பாலஸ்தீன கிளை அலுவலகத்தில் இருந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இதுவரை எந்த அவசர நிலையும் ஏற்படவில்லை என்றும், அவர்களின் பாதுகாப்பு இஸ்ரேலிய அரசாங்கத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாப்பா கூறியுள்ளார்.