யாழில் இரு மாணவர்களிடையே மோதல் – பாடசாலை முன் பதற்றம்
யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனின் தலையில் காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (26-10-2023) மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, மாணவனின் உறவினர்கள் பாடசாலைக்கு சென்று, பாடசாலையின் முன்னால் தகராறு செய்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்