நாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.
Related Post

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது [...]

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பரவலாக மழை
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது. நாட்டின் [...]