விஜய் க்கு வந்த சோதனை – ஆபாச வசனத்தால் வெடித்த சர்ச்சை

‘லியோ’ படம் டிரெய்லரில் விஜய் பேசும் ஒரு ஆபாச வசனம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியானது.
இதில் விஜய் பேசும் ஒரு ஆபாச வசனம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த வசனத்தை சுட்டிக்காட்டி கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை கூறியுள்ளதாவது:-
அரசியலுக்கு வரப்போகிறேன் என்று தன்னுடைய ரசிகர்களை வைத்து அம்பேத்கர் போன்ற தலைவர்களை முன்னிறுத்தும் விஜய், ‘லியோ’ டிரெய்லரில் பெண்களை தவறாக சித்தரிக்கும் வார்த்தையை கூறி இழிவு செய்வது நியாயமா?
அப்படி கடுமையான வார்த்தைகளை கூறி தான் ஆக வேண்டுமா? படத்துக்கு வசனம் தேவைப்பட்டால் எவ்வளவோ வார்த்தைகள் தமிழ் மொழியில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் படத்தின் டிரெய்லரிலும் ஜோதிகா பேசும் இதே வசனம் சர்ச்சையாக வெடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Post

பாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்
கேரளாவின் ஆலப்புழாவில் இசை குழு ஒன்றின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரபல திரைப்பட பின்னணி [...]

தயாரிப்பாளரை நிர்வாணமாக்கி சித்ரவதை – வெட்டுக்காயங்களுடன் மீட்ட போலீஸ்
தனி ஒருவன், மனம் கொத்திப்பறவை, டோரா உள்ளிட்ட ஏராளமான படங்களின் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் [...]

விஜயின் மகனுடன் இணையும் துருவ் விக்ரம்
2019இல் வெளியான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் துருவ் [...]