யாழில் மன விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்
யாழ்ப்பாணம் மானிப்பாய் சுதுமலை பகுதியில் யாரும் தனக்கு இல்லை என்று கிணற்றுக்குள் விழுந்த முதியவரை மானிப்பாய் பொலீசாரும் மக்களும் காப்பாற்றி அவரை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சில காலமாக தனிமையில் தான் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்ததாகவும் தனக்கு என்ன செய்வதென்று தெரியாத ஆகவும் அந்த மன விரக்தியில் கிணற்றில் விழுந்ததாகவும் முதியவர் குறிப்பிட்டார்
மேலும் விசாரணைகளை மானிப்பாய் போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.