நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் ஹர்த்தால்


முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுஎன்பது குறித்து 7 தமிழ் தேசிய கட்சிகள் இன்றைய தினம் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ் சந்திப்பு யாழ் கோவில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் வடமாகாண முதலமைச்சரின் வாஷ்த்துதலத்தில் நடைபெற்ற விஷேடசந்திப்பில் இவ் முடிவு எடுக்கப்பட்டுள்ளது

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன், சித்தார்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீகாந்தா வடமாகணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன், மற்றும்
தியாகராஜா நிரோஷ், மாவை சேனாதிராஜா கலையமுதன் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின் அடுத்த வாரம் ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பில் முடிவுஎடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்த்தாலுக்கான திகதி சில தினங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது.

WhatsApp Image 2023 10 06 at 21.37.35 92b34998
WhatsApp Image 2023 10 06 at 21.37.35 01f8238e

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *