நீதிபதி பதவி விலகல் – ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கண்டனம்


மிக உன்னதமான நீதித்துறையில் தலைசிறந்த அஞ்சா நெஞ்சுரத்துடன் குருந்தூர் மலை சட்டவிரோத பௌத்த கட்டுமானம், உள்ளிட்ட விவகாரங்களில் யாருக்கும் அடிபணியாமல் தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு நீதிபதி மாண்புமிகு சரவணராசா அவர்கள் அழுத்தங்களால் பதவி விலக நிர்ப்பந்திக்கபட்டு உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை வெளியேறி உள்ளமை தமிழர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இது இந்த நாட்டின் நீதிப் பொறிமுறையையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்றையதினம் அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

இந்நிலையில் தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்க முடியாத நாட்டின் சட்டவாக்க சபையான பாராளுமன்றை ஒட்டு மொத்த தமிழ் எம்பிகளும் புறக்கணிக்க வேண்டும் என நாம் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு ஊடாக ஆழமாக வலியுறுத்துகின்றோம்

குருந்தூர் சட்டவிரோத பௌத்த கட்டுமானம் தொடர்பாக நீதியான தீர்ப்பு வழங்கியமைக்காக தொடர் அழுத்தம் உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி முல்லைத்தீவு நீதிபதி பதவியை துறக்க நிர்ப்பந்திக்கப்பட்ட மாண்புமிகு சரவணராசா அவர்களின் நேர்மையை போற்றும் வகையில் தமிழ்ச்சமூகமாக ஆதரவை வெளிப்படுத்துவதுடன் அவரின் இந்த முடிவுக்கு காரணமான அழுத்தங்களை பிரயோகித்த சகல தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை தமிழர் சாரந்த அனைத்து கட்டமைப்புக்ளும் குறிப்பாக சட்டவாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பிக்கவும் வேண்டுகின்றோம்.

இலங்கையின் சகல முற்போக்கு சக்திகளும் சர்வதேசமும் ஐ.நா அமைப்புக்களும் நீதியை வழங்கும் நீதிபதிக்கே ஏற்பட்டுள்ள இந்த பாரதூர நிலையை சீர்செய்ய நீதி பரிபாலனம் சுயாதீனமாக இயங்க உச்சபட்ச நடவடிக்கைகளல இந்த துக்ககரமான தருணத்தில் எடுக்க வேண்டி நிற்கின்றோம் – என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *