பல்கலைக்கழக விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

2022-2023 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (14) முதல் ஒக்டோபர் 5ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை செப்டம்பர் 14 (இன்று) முதல் அக்டோபர் 5, 2023 வரை சமர்ப்பிக்கலாம். மேலும், பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டல் கையேடு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பங்களை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளமான www.ugc.ac.lk மூலம் ஒன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கையேட்டை பிரதேச மட்டத்தில் பதிவு செய்யப்பட்ட புத்தக விற்பனை நிலையங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட புத்தக விற்பனை நிலையங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகம் மற்றும் அஞ்சல் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டல் கையேடு விற்பனை செய்யப்படும் புத்தக விற்பனை நிலையங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள www.ugc.ac.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

புதிய கல்வியாண்டில் அரச பல்கலைக்கழகங்களில் மொத்தம் 45 ஆயிரம் மாணவர்களை சேர்த்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.