லிபியா டேனியல் புயலின் பேரழிவு – 20,000 பேர் பலி


லிபியாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 18,000 பேர் முதல் 20,000 பேர் வரை பலியாகிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

லிபியாவில் டேனியல் புயல் மிக மோசமான அழிவை ஏற்படுத்தி இருக்கிறது. டேனியல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை 2 அணைகளை துவம்சம் செய்தது.

இந்த அணைகள் உடைந்த போது பெருவெள்ளமானது சுனாமி எனும் ஆழிப்பேரலையை விட பல மடங்கு அதிவேகமாக நகரங்களை காவு கொண்டது.

இந்த பெருவெள்ளத்தில் சிக்கிய டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் நகரங்கள் அடையாளமே தெரியாமல் அழிந்து போயின.

லிபியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கிய இந்த பெருவெள்ளத்தில் சிக்கி மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 6,000. மேலும் 10,000 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.

பெருவெள்ள ஆறானது மனிதர்களை அப்படியே வாரி சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் வீசியதாம். இதனால் டெர்னா நகரை ஒட்டிய கடலுக்குள் தேடும் இடமெல்லாம் மனித உடல்களாக சிதறி கிடக்கிறது என அதிருகின்றனர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *