நாமலை பிரதமராக்க ரகசிய திட்டம்


நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்காக கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவே முன்னின்று செயற்படுவதாகவும் மகிந்த பதவி விலகினால் நாமலே தகுதியானவர் எனவும் அமைச்சர் குழுவொன்றினால் தெரிவிக்கப்படுகிறது.

நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்குமாறு சமூக ஊடகங்களில் பாரிய பிரச்சாரத்தை முன்னெடுக்க பிரதமரின் ஊடகப் பிரிவு, நெருங்கிய ஊடகவியலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *