சிலருடன் மலை உச்சிக்கு சென்ற பெண் மர்மமாக முறையில் உயிரிழப்பு
தலவாக்கலை கிரேட் வெஸ்ட்ட(ர்)ன் மலை உச்சியில் நேற்று (01) மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பல பிரிவுகளின் ஊடாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரேட் வெஸ்ட்ட(ர்)ன் மலை உச்சியில் முகாமிட்டிருந்த சிலர் பெண் ஒருவரின் சடலத்தைக் கண்டுள்ளதை அடுத்து, அவர்கள் இது குறித்து தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் சிலருடன் மலை உச்சிக்கு சென்றுள்ள நிலையில், பெண் உயிரிழந்ததன் பின்னர் சடலத்தை மலை உச்சியில் கைவிட்டு அந்தக் குழு அங்கிருந்த தப்பிச் சென்றிருக்கலாம் என தலவாக்கலை பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
இதேவேளை, கிரேட் வெஸ்ட்ட(ர்)ன் மலைத்தொடரில் முகாமிட வருவோர் வனப்பகுதிக்குள் நுழைவதற்கான முறையான அமைப்பு ஒன்று தயாரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.