மேலும் ஒரு விபத்து – தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் பேருந்து
இந்த பேருந்தில் சுமார் 25 பயணிகள் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தின் போது பதிவான சி.சி.டி.வி வீடியோ வௌியாகியுள்ளது.
தனியார் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து இன்று (15) காலை விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்தின் 4 சக்கரங்களும் மேலே உள்ளவாறு கவிழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
தெமோதர நீர் வழங்கல் சபைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் இரண்டு அம்புலன்ஸ் வண்டிகளில் வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பு – பதுளை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.