மின்கம்பத்தில் மோதி பேருந்து தீக்கிரை – 25 பேர் பலி
இந்தியாவின், மகாராஷ்டிராவில் சமுருத்தி-மஹாமார்க் அதிவேக வீதியில், பயணிகள் பேருந்தொன்று தீப்பற்றி எரிந்ததில் மூன்று குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
புனே நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த பேருந்தில் சுமார் 33 பேர் பயணித்ததாகவும் மின்கம்பத்தில் மோதியே பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் புல்தானா மாவட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.