யாழில் ரகசியமாக சுற்றுலா சென்ற மாணவ, மாணவிகள்

யாழ்.மாவட்ட பாடசாலையொன்றின் உயர்தர மாணவ, மாணவிகள் பாடசாலை நிர்வாகத்தின் அனுமதியின்றி சில நாள் சுற்றுலா சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தீவக கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றில் நடந்துள்ளது. அண்மையில் பாடசாலை விடுமுறை விடப்பட்டிருந்தபோது மாணவர், மாணவியர் 30 பேர் வெளிமாவட்ட சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர்.
இதற்காக மாணவிகள் ரூ.3,000 வீதம் செலுத்தியுள்ளனர். மாணவர்கள் சிலர் அதைவிட அதிக தொகை பணம் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சில நாட்களின் முன்னர் அந்த பாடசாலையின் அதிபர் ஓய்வுபெற்றார். ஆசிரியை ஒருவரிடமே பதில் அதிபர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதன்பின்னரே மாணவர்கள் சுற்றுலா சென்று வந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Related Post

அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்
பச்சரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. [...]

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்குதல் – இளைஞன் மரணம்
ஒன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் நெஞ்சுவலி காரணமா யாழ்.போதனா [...]

இலங்கையில் புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பு
மருத்துவ ஆராய்ச்சி குழு இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் புதிய வகை நுளம்பைக் [...]