யாழ் திருநெல்வேலியில் பிரபல வர்த்தகரின் மகளான பதின்மவயது பாடசாலை மாணவியின் கட்டிலின் கீழ் , காதலனான யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வர்த்தகரின் வீட்டுக்கு சற்றுத் தொலைவில் வீடு ஒன்றில் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு பிடிபட்ட பல்கலை மாணவனும் மாலை வேளைகளில் அங்கு நிற்பதை வழமையாகக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் பாடசாலை மாணவிக்கும் அவனுக்கும் இடையே காதல் தொடர்பு ஏற்பட்ட நிலையில், காதலியில் வீட்டுக்கு காதலன் சென்றுவருவதை அயலர்வகள் சிலர் அவதானித்துள்ளனர்.
இந் நிலையில் நேற்று மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பல்கலை மாணவன் புகுந்த பின்னர் அயல்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் சிலர் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
வீட்டில் சிசிரீவி கமராக்கள் பூட்டப்பட்டிருந்த நிலையிலும் வீட்டின் மதில் மேல் ஏறிப் பாய்ந்த இளைஞர்கள் வீட்டின் உள்ளே சென்ற போது மாணவி அறை ஒன்றை பூட்டி விட்டு உள்ளேயே இருந்துள்ளார்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோருக்கு அயலவர்கள் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்து அவர்கள் வீட்டுக்கு வரும்வரையில் காத்திருந்துள்ளனர். வர்த்தகர் வீட்டுக்கு வந்து அறைக் கதவை திறக்குமாறு மகளுக்கு கூறியும் மகள் கதவைத் திறக்காது இருந்தால் கதவு உடைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மாணவி இருந்த அறை கட்டிலின் கீழ் பல்கலைக்கழக மாணவன் பிடிக்கப்பட்டு வர்த்தகரால் கட்டிவைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட காதலனை காப்பாற்ற முனைந்த மாணவி, மாணவனை பொலிசாரிடம் பிடித்துக் கொடுத்தால் தான் தற்கொலை செய்ய்யபோவதாக பயமுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
இதன் பின்னர் வர்த்தகரின் மனைவி மற்றும் அயலவர்கள் சிலரின் முயற்சியால் மாணவன் கட்டவிழ்த்து விடப்பட்டு மாணவனின் பெற்றோரும் அங்கு வரவழைக்கப்பட்டதாகத் கூறப்படுகின்றது.
இதே நேரம் மாணவன் அறைக்குள் தங்கியிருந்த போது பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டதால் அங்கு பொலிசார் சென்ற நிலையில் வர்த்தகர் மற்றும் உறவுகள் பொலிசாரை தமது தனிப்பட்ட விடயம் என கூறி திருப்பி அனுப்பியதாகவும் தெரியவருகின்றது.