யாழில் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன்

யாழ்.ஒஸ்மானிய கல்லுாரியின் பயிற்சி ஆசிரியர் மீது பாடசாலை மாணவன் ஒருவன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தொிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(24) இடம்பெற்றுள்ளது.
அதேவேளை யாழ்.ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இதே மாணவனால் பிரச்சினை ஏற்பட்டு ஆசிரியரொருவர் மீது குறித்த மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டாரென தெரிவிக்கப்படுகிறது.
முன்னர் நடந்த சம்பவம் தொடர்பாக காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமை காரணமாக தொடர்ச்சியான ஆசிரியர் மீதான தாக்குதல்கள் மேற்கொள்லப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
Related Post

இந்தோனேசியாவில் நில நடுக்கம் – 20 பேர் பலி, 300 பேர் காயம்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 300 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட [...]

மிதக்கும் ஆகாயக் கப்பலை தயாரித்து புதிய சாதனை
சீனாவில் ஜிமு நம்பர் 1 என பெயரிடப்பட்ட மிதக்கும் ஆகாயக் கப்பல் ஒன்று [...]

தொடரூந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு .
வவுனியா – மெனிக்பாம் பகுதியில் தொடரூந்தில் மோதி நபரொருவர் உயிரிழந்தார். இன்று காலை [...]