இலங்கையில் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

16 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மகாணங்களிலும் மன்னார்,அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.
அத்துடன் மன்னார், அநுராதபுரம், புத்தளம், குருணாகல், மாத்தளை, பொலன்னறுவை, கம்பஹா,கோகலை,கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுக்குமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Related Post

இடியுடன் கூடிய மழை – பலத்த காற்றும் வீசக்கூடும்
மேல், சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மன்னார், [...]

சிறிதளவில் மழை பெய்யும்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் [...]