யாழ் நெடுந்தீவில் 5 பேர் படுகொலை – ஒருவர் படுகாயம்

நெடுந்தீவு பகுதியில் இன்று (22) அதிகாலை 3 பெண்கள் உட்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெடுந்தீவு, இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே, இனந் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரிய வருகின்றது.
இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறு பேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Related Post

சிறுவர் இல்லத்தில் இருந்து 14 வயது சிறுமி மாயம்
குருநாகல் பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றில் பராமரிக்கப்பட்டு வந்த பிள்ளையொன்று காணாமல் போயுள்ளதாக குருநாகல் [...]

மன்னாரில் பட்டாரக வாகனம் விபத்து – ஒருவர் பலி
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் உள்ள இசைமாலைதாழ்வு பகுதியில் இன்று (13.11) [...]

துப்பாக்கி சூடு ஒருவர் காயம்
கம்பஹா, மாகாவிட்ட பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் [...]