காட்டுப் பகுதியில் 12 வயது சிறுமியுடன் இருந்த 32 வயது நபர் கைது

12 வயதுடைய பாடசாலை மாணவியொருவருடன் இருந்த 32 வயதுடைய நபரொருவர் சந்தேகத்தின் பேரில் சாலியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீரபுர பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இருவரும் இருந்த நிலையில் சந்தேக நபருடன் சிறுமியும் பொலிஸாரின் பொறுப்பில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
வீரபுர பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற நபர் ஒருவர் இவர்கள் இருவரையும் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். தகவலின் அடிப்படையிலேயே குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
அதேவேளை குறித்த நபருடன் இருந்த மாணவி ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Related Post

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்க தீர்மானம்
தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் [...]

காணாமல் போன பெண் – பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
காணாமல் போன பெண் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி நாடி [...]

யாழ் பல்கலை மாணவி திடீர் மரணம் – வெளியான அதிர்ச்சி காரணம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலையை கற்கும் மாணவி ஒருவர் [...]