ரயிலுடன் கார் மோதி இருவர் உயிரிழப்பு
கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் ஒன்று காருடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் கடவையின் ஊடாக கார் கவனக்குறைவாக கடக்க முற்பட்ட போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காருக்குள் இருந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.