பாடசாலையில் வைத்து மாணவன் துஷ்பிரயோகம் – 2 மாணவர்கள் கைது
தரம் 6 இல் கல்விப்பயிலும் மாணவன் ஒருவனை, தரம் 11 இல் கல்விப்பயிலும் மாணவர்கள் இருவர், பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலைக்குள் வைத்தே இவ்வாறு பலமுறை அந்த மாணவனை இவ்விரு மாணவர்களும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.
அச்சுறுத்தி மறைவான இடத்துக்கு கூட்டிச்சென்று, இருட்டான பிரதேசத்தில் வைத்து அவருடைய காற்சட்டையை கழற்றி, வாயை ஒருவர் பொத்திக்கொள்ள, மற்றொருவர் பாலியல் துஷ்பியோகம் செய்துள்ளார். அவ்வாறே இவ்விரு மாணவர்களும் அந்த மாணவனை மாறி, மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது என்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விரு மாணவர்களும் அந்த மாணவனை பல தடவைகள் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், அவ்விரு மாணவர்களையும் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.