திருமண நிகழ்வுக்கு சென்ற படகு நீரில் மூழ்கி 21 பேர் பலி
ஏமனின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹொடைடா துறைமுக நகர பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருமண நிகழ்வொன்றுக்கு 27 பேர் சென்றிருந்த நிலையில், திடீரென படகு நீரில் மூழ்கியதால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 பெண்கள், 7 சிறுவர்கள் மற்றும் 2 ஆண்கள் அடங்குவர்.
குறித்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், கடலில் வீசிய பலத்த காற்றினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.