அவசர வேண்டுகோள் – இவர்களைப் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் உடனே அறியத்தரவும்
📳071-8591324
☎️021-2263227
இவர்கள் இருவரும் திக்கம் பொது சந்தைக்கு அருகில் வைத்து இன்று காலை (25.02.2023) 8.25 மணியளவில் ஒரு பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.
முகத்தை மூடி அணிந்துள்ள பச்சை தலைக்கவசம் அணிந்தவரால் ஓட்டிச் செல்லப்பட்ட இந்த மோட்டார் சயிக்கிளைக் (4342) கண்டவர்கள் அல்லது இதில் உள்ளவாறு மோட்டார் வண்டி, ஆடை, தலைக்கவசம் அணிந்தமை பற்றி சந்தேகத்திற்கிடமாக யாராவது இருப்பின் உடனடியாக அறியத்தரவும்.
திக்கம் நெல்லியடி வீதியில், திக்கம் கடற்கரையில் இருந்து திக்கம் ஊரிற்குள் நுழைந்தது முதல் வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரியில் இருந்து நெல்லியடியை நோக்கி மோட்டார் சயிக்கிள் சென்றுள்ளது வரையிலான CCTV காணொளிகள் மூலமாக 8.08 மணி தொடக்கம் 8.28 வரையான நேரத்தில் இவர்களின் முழு நடமாட்டமும் பற்றிய விபரத்தை பெற்றுள்ளோம்.
ஆகையால், இவர்களை பிடிப்பதற்கான உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.