சூறாவளி காரணமாக அவசர நிலை பிரகடனம் – விமான சேவைகளும் ரத்து

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

சூறாவளி அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கூடிய விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நாட்டு மக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது, ​​கேப்ரியல் சூறாவளியின் மையம் நியூசிலாந்திற்கு தெற்கே 910 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

சூறாவளி காரணமாக பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் மணிக்கு 133 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.