மட்டக்களப்பை சென்றடைந்த மாபெரும் எழுச்சி பேரணி
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைகழக மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட மாபெரும் எழுச்சி பேரணி கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பை சென்றடைந்துள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி ஆரம்பித்த பேரணி இன்று நான்காவது நாள் திருகோணமலையில் இருந்து ஆரம்பித்து மட்டக்களப்பு நகரை அடைந்திருக்கின்றது.
திருகோணமலை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த பேரணி பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் மட்டக்களப்பை அடைந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்திருந்த நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார்,
அரசியல் பிரதிநிதிகள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் அமைப்புக்கள் என பலதரப்பினரும் கலந்துகொண்டனர்.