பிரித்தானியாவில் நடைபெற்ற 30 வது ஆண்டு மாவீர வீரவணக்க நாள்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

பிரித்தானியாவில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 30 வது ஆண்டு வீரவணக்க நாள்.

தளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுநாள்!!

வங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து 30 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன.

ஆனால், தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து இன்னும் எரிந்து கொண்டேயிருக்கின்றன. கேணல் கிட்டுவும், அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி, வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல, அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி, நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று.

நினைவுவணக்க நிகழ்வானது இன்று தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் லண்டனில் நடாத்தப்பட்டது.

நிகழ்வில் பொதுசுடரினை ராதா கலைப்பள்ளி ஆசிரியர் திருமதி விஜயராணி கிருஷ்ணராஜ் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் தென்மேற்கு பிராந்திய கலை பண்பாட்டுக்குழு பொறுப்பாளர் திரு பாலசுந்தரம் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். ஈகைச்சுடரினை நாட்டியாலயா நடனப்பள்ளி ஆசிரியர் சாமினி கண்ணன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

தொடர்ந்து திரு உருவப்படத்திற்க்கான மலர் மாலை அணிவிக்கப்பட்டு மக்கள் வணக்கம் செலுத்தினார்கள்.

ராதா கலைப்பள்ளி ஆசிரியர் திருமதி விஜயராணி கிருஷ்ணராஜ் மற்றும் நாட்டியாலயா நடனப்பள்ளி ஆசிரியர் சாமினி கண்ணன் ஆகியோருடைய மாணவிகளின் நடனம் மற்றும் திரு கிருபா அவர்களுடைய கவிதையும் இடம் பெற்றது.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அரசியல் துறை பொறுப்பாளர் திரு நியூட்டன் அவர்களுடைய உரை இடம் பெற்றதை தொடர்ந்து உறுதி மொழி எடுக்கப்பட்டு தேசிய கொடி கையேந்தலுடன் நிகழ்வானது நிறைவு பெற்றது.