யாழில் வன்முறைக் கும்பல் வாள்வெட்டு – நபர் ஒருவர் வைத்தியசாலையில்

நபர் ஒருவர் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்காடு பகுதி வீதியில் நேற்றிரவு (07) 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத 04 நபர்களால் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வாள்களால் வெட்டப்பட்டு காயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச் சம்பவத்தில் ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த குலசிங்கம் சூரியகுமார் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
வாள்வெட்டினை மேற்கொண்டவர்கள் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
மேலும் இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

நள்ளிரவில் வீட்டுக்கு வந்த வாகனம் – 4 பேரும் கொலை செய்யப்படார்களா?
வவுனியா, குட்ஷெட் பகுதி வீடொன்றில் சடலாமக் தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகளின் [...]

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
கிளைபோசேட் இறக்குமதியை அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லிகள் பதிவாளரின் பரிந்துரையின் [...]

கொட்டும் மழைக்கு மத்தியில் திலீபனின் நினைவேந்தல்
தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை [...]