நள்ளிரவில் வீட்டுக்கு வந்த வாகனம் – 4 பேரும் கொலை செய்யப்படார்களா?

வவுனியா, குட்ஷெட் பகுதி வீடொன்றில் சடலாமக் தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகளின் உயிரிழப்புக்கான காரணங்கள் எதுவும் இன்னும் வெளியாத நிலையில், நள்ளிரவில் அவர்களின் வீட்டுக்கு வாகனம் ஒன்று வந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீட்டுத்தலைவர் கடனை செலுத்த முடியாத காரணத்தினால் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்ற அதேசமயம் ஆனால் அதுதான் சரியான காரணம் என்று கூற முடியாது என உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் வெளிநாட்டு முகவர் நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், மனைவி வவுனியா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார்.
இதேவேளை உயிரிழந்தவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்த சம்பவ தினத்தன்று அந்த வீட்டுக்கு ஹயஸ் வாகனம் ஒன்று வந்து சென்றுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் சிவபாலசுந்தரம் கௌசிகன் என்ற 41 வயதுடைய நபர், அவரது மனைவி 36 வயதுடைய கௌசிகன் வரதராஜினி மற்றும் மகள்களான 09 வயதுடைய கௌசிகன் மைதிரா மற்றும் 03 வயதான கௌசிகன் கேசரா ஆகியோரே உயிரிழந்திருந்தனர்.
வவுனியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதிலும், மரணத்திற்கான சரியான காரணம் நேற்றைய தினம் வெளியாகவில்லை.
அதேவேளை வைத்தியசாலையின் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் சடலங்களின் பிரேதப் பரிசோதனைகள் தாமதமாகியுள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறிய உடல் உறுப்புகள் மற்றும் இரத்த மாதிரிகள் அரசாங்க மரண விசாரணை திணைக்களம் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அவர்களின் வீட்டுக்கு வாகனத்தில் வந்தவர்கள் யார் என்பது தெரியாத நிலையில் அது தொடர்பாக பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேசமயம் பச்சிளம் குழந்தைகளுடன் பெற்றோரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் வவுனியாவில் மட்டுமல்லாது தமிழர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.