இரு குழுக்களுக்கு இடையே மோதல் – ஒருவர் பலி, 5 பேர் வைத்தியசாலையில்

பெத்தியாகொட பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், மூவர் ராகம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
களனி பெத்தியாகொட பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுயவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த தகராறிற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

யாழில் சடலமாக மீட்கப்பட்ட நபர் – மரணத்தில் பொலிஸார் சந்தேகம்
யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த [...]

தீயணைப்பு வாகனத்துடன் மோதிய பயணிகள் விமானம்
பெரு தலைநகரான லிமாவில் ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனத்துடன் மோதிய பயணிகள் விமானம் தீப்பிடித்து [...]

யாழ் மாவட்ட செயலகத்தோடு இணைந்த Mate in the srilanka வர்த்தகக்கண்காட்சி
யாழ் மாவட்டத்தில் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கைத் [...]