யாழில் 24 வயது இளைஞன் தற்கொலை
வீடொன்றில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் வீதி மானிப்பாய் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
குறித்த இளைஞன் நேற்றிரவு சாப்பிட்டு விட்டு உறங்க சென்றுள்ளார் அவர் காலையில் எழுந்து வராததால் வீட்டில் உள்ளவர்கள் அறையின் கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்தவேளை அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளனர்.