மகாபாரத “பீமன்” மரணம்


தூர்தர்சனில் ஒளிபரப்பான மகாபாரத தொடரில் பீமனாக நடித்து பிரபலமான பிரவீன்குமார் சோப்த்தி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப்பை சேர்ந்த 74 வயதுடைய பிரவீண்குமார், சிறந்த தடகள வீரராகவும் விளங்கினார்.

1966 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பொதுநலவாயம் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வட்டு எறிதல், சம்மட்டி எறிதலில் 2 தங்கப் பதக்கம் உள்பட 5 பதக்கங்கள் வென்றுள்ளார்.

தமிழில் மைக்கேல் மதன காமராஜன் உள்பட 50 க்கும் மேற்பட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *