கோர விபத்தில் சிக்கிய பேருந்து – 5 பெண்கள் படுகாயம்
ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களுடன் பயணித்த பேருந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் பயாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயமடைந்த ஐந்து பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலி – கொழும்பு பிரதான வீதியில் பயாகல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.