110 கோடி ரூபாய் போதைப் பொருலுடன் இருவர் கைது

110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்ற இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
இதன்போது குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம் 35 கிலோ ஐஸ் என்ற மெத்தபெட்டமைன் மற்றும் 50 கிலோ கஞ்சா எண்ணெய் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வருவாய் புலனாய்வு துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் பரமக்குடி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போதே இந்தப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Related Post

இலங்கையில் எரிவாயுவின் விலை 200 ரூபாயினால் அதிகரிப்பு
இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிவாயுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இவ்வாறான [...]

இன்று மற்றும் நாளைய மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
இன்று (28) மற்றும் நாளை நவம்பர் (29 ஆகிய நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் [...]

யாழ் போதனாவில் ஒரே தடவையில் பிறந்த 3 குழந்தைகள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் 3 குழந்தைகள் சுகப்பிரசவமாக இன்று (27) [...]