கட்டுநாயக்க விமான நிலையத்தில் 22 கிலோ தங்கத்துடன் ஐவர் கைது


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க வரலாற்றில், இரண்டாவது தடவையாக ஆகக் கூடுதலான தங்கக் கடத்தல், நேற்று (09) முறியடிக்கப்பட்டுள்ளது.

40 கோடி ரூபாய் பெறுமதியான 24 கரட் தங்கம் 22 கிலோகிராமுடன் நாட்டுக்குள் நுழைய முயன்ற இலங்கை பயணிகள் ஐவர் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தை அரசுடமையாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய புலனாய்வுதுறை அதிகாரிகள் வழங்கிய தகவல்கள் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தங்கம் ஜெல் போல தயாரிக்கப்பட்டு, உள்ளாடைகளில் மறைத்துவைத்தே கொண்டுவரப்பட்டுள்ளது. 24 கரட்டில் தயாரிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் நிறைவு செய்யப்படாத வகையில் கைகள், கழுத்துகளில் அணிந்தும் இவர்கள் எடுத்துவந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *