கொழும்பில் போராட்டம் – பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில் எந்தவொரு தரப்பும் போராட்டங்களை இன்றைய தினம் மேற்கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் அந்த தருணத்திலேயே உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ.ஜீ.ஜே சந்திரகுமார தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதாக எந்தவொரு தரப்பேனும் அறிவித்தல் விடுத்த மாத்திரத்தில் பொலிஸ் திணைக்களம் பதற்றமடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு கூடுதல் நேரம் செல்லாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புலனாய்வுப் பிரிவு தகவல்களின் அடிப்படையில் இந்த போராட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்ப்பு போராட்டங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பொலிஸாருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Related Post

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள்
பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இராணுவ வீரர் [...]

மாணவர்கள் திடீர் சுகவீனம் – மூடப்பட்ட பாடசாலை
குருநாகல் பாடசாலையொன்றில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் சிறுவர்கள் சிலர் திடீரென சுகவீனமடைந்த [...]

சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும் டாப்ஸ் சூப்பர் [...]