போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இத்தாலிய பிரஜைக்கு ஆயுள் தண்டனை
இலங்கையில் தங்கியிருந்து போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இத்தாலிய பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.டி.பி.பி.ரத்நாயக்க இன்று கடூழிய ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் 40 வயதான வத்தீயா ஜீபட் என்ற இத்தாலிய பிரஜைக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றவியல் விசாரணை பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த தஹான உள்ளிட்ட அதிகாரிகள் 90 கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இந்த இத்தாலிய பிரஜையை கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி கைது செய்தனர். அரச சட்டத்தரணி எரந்தி தஸநாயக்க வழக்கை நெறிப்படுத்தியுள்ளார்.