வீதியோரத்தில் கைவிடப்பட்ட குழந்தை

பொல்பித்திகம, கொருவா, பூகொல்லாகம பகுதி வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இன்று (02) காலை குழந்தையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொல்பித்திகமவில் இருந்து ஹிரிபிட்டிய வீதிக்கு செல்லும் வீதியின் ஓரத்தில் உள்ள பூகொல்லாகம வெலயா என்ற இடத்தில் குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டதனை அவ்வழியாக சென்ற ஒருவர் கேட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று சிசுவை மீட்டு பொல்பித்திகம ஆரம்ப வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Related Post

பதவி விலகுவேன் ஆனால் இப்போதில்லை – மக்களை குழப்பும் ரணில்
பிரதமர் ரணில் பதவி விலகவதாக நேற்று அறிவித்திருந்த நிலையில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு [...]

மாணவர்களை நடுவீதியில் விட்டுச் சென்ற அரச பேருந்து
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் சென்றதால் [...]

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் சந்திக்கப்போவதில்லை
ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என [...]