கனவில் வந்த பாம்பால் நாக்கை இழந்த விவசாயி

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

கனவில் அடிக்கடி பாம்புதோன்றியதால் பயந்துபோன விவசாயி ஒருவர் பரிகாரம் செய்யப்போய் நாக்கை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் ஈரோட்டைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவரின் கனவில் அடிக்கடிப் பாம்பு தோன்றியுள்ளது. இதுகுறித்து அவர் தனது மனைவிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டு உள்ளனர். அந்த ஜோதிடர் ஒரு கோவில் ஒன்றை குறிப்பிட்டு அங்கு உள்ள சாமியார் பாம்புகளை வளர்த்து வருவதாகவும், அவரிடம் உள்ள பாம்புக்கு பரிகாரம் செய்தால் பாவங்கள் நீங்கும் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விவசாயி கோவில் பூசாரியிடம் அதனை கூறியபோது தன்னிடம் 20-க்கும் மேற்பட்ட பாம்புகள் உள்ளதாகக் கூறிய பூசாரி, கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பை எடுத்து, பாம்பின் முன் நாக்கை நீட்டி பரிகாரம் செய்யக் கூறியுள்ளார்.

பாம்பின் முன் சென்று நாக்கை நீட்ட கொடிய விஷமுடைய பாம்பு விவசாயியின் நாக்கை திடீரென கடித்ததால் அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி, உடனே கத்தியை எடுத்து விவசாயியின் நாக்கை அறுத்துள்ளார். இதில் ரத்தம் அதிக அளவில் வெளியேறவே அந்த விவசாயி சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.

இதனையடுத்து விவசாயி மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு அந்த விவசாயி தற்போது உயிர் பிழைத்துள்ளார்.

அதேவேளை தற்போதைய காலத்திலும் இவ்வாறான மூடநம்பிக்கைகளுக்கு அமக்கள் அடிமையாகி இருப்பது கலவைஅயை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.