முல்லைத்தீவில் காட்டுயானை தாக்கி ஒருவர் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் 20 ஆவது கிலோமீற்றர் வனப்பகுதியில் காட்டுயானை தாக்கி சின்னசாளம்பனைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை மண்வெட்டி பிடி வெட்டுவதற்காக சென்ற வேளையிலே இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.
இந்த அனர்த்தத்தில் வவுனியா மெனிக்பாம் கிராமத்தை சேர்ந்த ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பனில் வசித்து வருகின்ற பச்சைமுத்து புலேந்திரன் (வயது48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

இலங்கையில் மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலை
இலங்கையில் சமீப காலமாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் நாட்டு [...]

பிரபாகரன் உயிரிழந்துவிட்டார் என ஏன் நிரூபிக்க முடியவில்லை
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் டி.என்.ஏ பரிசோதனை [...]

செல்போனால் 23வயது இளம்பெண் எலி மருந்து குடித்து தற்கொலை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவை சேர்ந்தவர் மனோன்மணி. கணவர் உயிரிழந்த நிலையில் [...]