விஜய்க்கு முன்பே களமிறங்கும் அஜித்

வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துடன் பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நாயகியாகவும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஜனவரி 13 ஆம் தேதி பொங்கலையொட்டி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாவதாக இருந்தது.
ஆனால், கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக படத்தினை ஒத்திவைப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். இதனால், அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இன்னும் ‘வலிமை’ வெளியீட்டுத் தேதியை உறுதி செய்யவில்லை. இந்த நிலையில், ‘வலிமை’ படத்தினை வரும் மார்ச் மாதம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் ‘பீஸ்ட்’ வரும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையையொட்டி வெளியாவதால் இரண்டு வருடங்களாக படப்பிடிப்பில் இருந்த ‘வலிமை’ படத்தை, அதற்கு முன்னரே மார்ச்சில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
Related Post

திருமண பந்தத்தில் இணைந்த ஆதி, நிக்கி கல்ராணி
தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா [...]

மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் சோதனை
மாஸ்டர் பட தயாரிப்பாளர் மற்றும் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான [...]

நடிகை தற்கொலை – கணவரின் உயிருக்கு ஆபத்து
அரசியல் பின்னணி கொண்ட கும்பலால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மறைந்த நடிகை [...]